Wednesday, June 30, 2010

டி.ஆர். - ஆப்ரிக்கன் இசை ஆல்பம்

டி.ஆர். என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அவரது அடுக்கு மொழி மற்றும் டன்டனக்கா. இதற்கும் மேலாக என் நினைவுக்கு வருவது அவருடைய 'அசாத்திய தன்னம்பிக்கை'. மனுஷன் வாயை வைத்தே பிழைத்து விடுவார். 


நாம் எவ்வளவு தான் அவரை கிண்டல் பண்ணினாலும் அவரு லதிமுக, குறள் டிவின்னு.., கலக்குறாரு. நான் அவருடைய  குறள் டிவிக்கு அடிமை. அவர் வலைத்தளத்தில் உள்ள எல்லா தொலைக்காட்சி தொகுப்புகளையும் பார்த்து விடுவேன். குறிப்பாக, டி.ஆர் வரும் எல்லா நிகழ்ச்சிகளையும் ( 99 % அவர் மட்டும் தான் வருவாரு... ) ஓன்று விடாமல் பார்த்து விடுவேன். 


குறள் டிவின்னு வலைத்தளப் பெயர் வைத்துக் கொண்டு திருக்குறள் பற்றி ஒரு பக்கமாவது இருக்கனும் இல்லையா ?.... அதுக்கு நம்ம டி.ஆர். ஒரு பகுதியே வைத்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியின் பெயர் " குறளின் குறள் ".  இந்த நிகழ்ச்சிக்கு தொடக்க உரை கொடுத்திருப்பர் பாருங்க... அந்த திருவள்ளுவர் மட்டும் இப்போ இருந்திருந்தா...? நினைக்கவே பயமா இருக்குது. 
சுட்டி -   குறளின்  குறள் 


எப்போவாவது மனசு இறுக்கமா இருந்திச்சுனா.. நேரா யூ-டியுப் போய் டி. ஆர். ன்னு  சர்ச் பண்ணி அவரோட வீடியோ, அதுக்கு நம்ம யூசர்ஸ் போட்டா கமெண்ட்ஸ படிச்சாலே போதும். உண்மையிலே நம்மக்கு அவரோட தன்னம்பிக்கை வந்துரும்.


சமீபத்துல, வழக்கம் போல  யூ-டியுப்ல டி. ஆர். தேடினால் அப்போ கீழே  இருக்குற இந்த அருமையான வீடியோ கிடைச்சது.
இந்த நிகழ்ச்சிக்கு பெயர் என்னன்னா " கேளுங்கள் சொல்லப்படும் ".  இந்த நிகழ்ச்சில ஒருத்தன் பிரான்ஸ் (..??) இருந்து போன் பண்ணுறான். நம்ம டி.ஆர் வழக்கம் போல அவரோட சுய புராணத்த ஆரம்பிக்கிறார்.  ஒரு கட்டத்துல " என்ன கொண்டு ஆப்ரிக்காவில விட்ட கூட, நான் பாட்டு பாடி அவங்களையே அட்டாக் பண்ணுவேன்" சொல்லி  வாயாலே பின்னி எடுப்பாரு பாருங்க...   இப்போ எங்க ஆபீஸ்ல மதியம் இந்த வீடியோ தான் பட்டய கிளப்புது.... 


அடுத்து அவரோட " ஒரு தலை காதல் " படத்திற்கு காத்திருக்கிறேன். டி.ஆரே. சொல்லிடாரு படம் முழுசும் இசை சங்கமமின்னு. 








பிடித்திருந்தால் தமிழிஷில் வோட்டு போட மறவாதிர்கள்.....

Saturday, June 5, 2010

தாமஸ் ஆல்வா எடிசன்

பள்ளிக்கு சென்று பாடம் படிக்காத விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், சுயமாக படித்து முன்னுக்கு வந்தார். மிக அதிக எண்ணிகையில் புதிய கண்டறிதவர் என்ற பெருமை எடிசனுக்கு மட்டுமே உண்டு. 


அவர் வாழ்வில் நடந்த சில சுவையான நிகழ்வுகளை இங்கு பகிர்த்து கொள்ள ஆசைப்படுகிறேன். 

மின் விளக்குக்கு எந்த உலோக கலவை இழை சரியாக இருக்கும் என்று கண்டறிய கிட்டத்தட்ட ஆறாயிரம் முறை வெவ்வேறு உலோக இழைகளை கொண்டு போராடினார். இது குறித்து எடிசன் கூறும் போது, " முதல் சோதனையே எனக்கு வெற்றி தான். ஏனெனில் அது தான் இரண்டாவது சோதனையை செய்ய தூண்டியது. விளக்குக்கு சரியான மின்னிழையை கண்டுபிடிக்க எனக்கு ஒரு முயற்சி தான் தேவைப்பட்டது. ஆனால் அதற்கு எந்தெந்த உலோக இழைகளை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்கு தான் 5999 முறை தேவைப்பட்டது. மேலும் 5999  உலோக இழைகளை பயன்படுத்த முடியாது என்பதையும் கண்டுபிடித்துளேன்" என்றார்.

இன்னொரு நிகழ்வு :

ஒரு சமயம் ஒரு விருந்தினரின் வீட்டில் நடைபெற்ற தொடர் நிகழ்ச்சியை பார்க்கும் படியான கட்டாயம் ஏற்பட்டது.அது அவருடைய மனதை கவரவில்லை என்பதால் பெருதும் சலிப்புற்றார்  எடிசன். அவர் வெளியே செல்லும் முயற்சி செய்யும் போதெல்லாம் யாராவது ஒருவர் அவர் கையைப் பிடித்து பேசியபடி ஹாலுக்குள் அழைத்துச் சென்றபடி இருந்தனர். ஒருவழியாக கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறி இறுதியில் கதவோரமாக இருத்த நாற்காலியில் அமர்ந்தார்.

அப்போது மிகவும் உற்சாகமாக வந்த ஒருவர் எடிசனிடம், " நீங்கள் இங்கே வந்திருப்பது எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களுடன் இருப்பது எங்களுக்கு நீங்கள் அளித்த கவுரவம். அடுத்து நீங்கள் என்ன கண்டுபிடிக்கக்  போகிறிர்கள்" என்றார்.

அதற்கு " இங்கிருந்து  எப்படி வெளியேறுவது என்று கண்டுபிடிக்கவிருக்கிறேன் !!!" என்று சட்டென பதில் கூறினார் எடிசன்.

நன்றி : தினத்தந்தி 
பிடித்திருந்தால் தமிழிஷில் வோட்டு போட மறவாதிர்கள்.....